டி20யில் 500 விக்கெட்டுகள்: 44 வயதில் இம்ரான் தாஹிர் சாதனை

தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர் ANI

தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

வங்தேசத்தில் நடைபெற்று வரும் பிபிஎல் லீக் போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இம்ரான் தாஹிர். நேற்று (செவ்வாய்க்கிழமை) குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இம்ரான் தாஹிர். உலகளவில் இந்த சாதனையைப் படைத்த 4-வது வீரர் இம்ரான் தாஹிர் ஆவார். இப்பட்டியலில் டுவைன் பிராவோ - 624 விக்கெட்டுகள், ரஷித் கான் - 556 விக்கெட்டுகள், சுனில் நரைன் - 532 விக்கெட்டுகள் ஆகியோர் முறையே முதல் மூன்று இடத்தில் உள்ளனர். 44 வயதில் இச்சாதனையைப் படைத்து, சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை நிருபித்தார் இம்ரான் தாஹிர். இதுவரை 404 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ள இம்ரான் தாஹிர் 502 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in