தமிழ்த் திரையிசையில் திறமைகள் இல்லையா?: பிரபல திரையரங்கு அதிபரின் வேதனை

அனிருத்தைத் தவிர வேறு யாரும் நிலையான இசையைக் கொடுப்பதில்லை என்று வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் கூறினார்.
தமிழ் சினிமா
தமிழ் சினிமாANI

சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன். இவர் தன்னுடைய X தளத்தில், “இன்றைய தமிழ் சினிமாவில் இசைத்துறை கவலை நிலையில் உள்ளதாக” கூறினார்.

ராகேஷ் கௌதமன் கூறியதாவது: “இன்றைய தமிழ் சினிமாவில் இசைத்துறை கவலை நிலையில் உள்ளது. ஆரம்பம் முதல் தமிழ் சினிமாவில் பாடல்களே ஆதிக்கம் செலுத்தியது. இசையே ஒரு படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும். இன்று அனிருத்தைத் தவிர வேறு யாரும் நிலையான இசையைத் தருவதில்லை. ஒரு சிலர் நல்ல பின்னணி இசையைத் தருகிறார்கள், ஆனால் முழுப் படத்தின் பாடல்களும் வெற்றி பெறுவதில்லை. நம்மிடம் திறமையானவர்கள் இல்லையா? அல்லது இயக்குநர்கள் பாடல்கள் மீது ஆர்வம் காட்டுவதில்லையா?. ஏ.ஆர் ரஹ்மான் உச்சத்தில் இருந்தபோது கூட ரசிகர்களை மகிழ்விக்க நிறையப் பேர் இருந்தனர். நாம் தினசரி கேட்கக்கூடிய பாடல்கள் இன்றைய படங்களில் இடம்பெற்றவை இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்தால், நான் சொல்ல வருவது புரியும். வாரணம் ஆயிரம், 3, சிவா மனசுல சக்தி போன்ற படங்களின் இடம்பெற்ற பாடல்களை இன்றும் நாம் கேட்பதற்கு, இதுவும் ஒரு காரணம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in