புறநகர் ரயில்
புறநகர் ரயில் ANI

பராமரிப்புப் பணி: 44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து

தண்டவாளப் பராமரிப்பு பணிகளுக்காக இன்று (பிப்.11) பல்வேறு வழித்தடங்களுக்குச் செல்லும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published on

தண்டவாளப் பராமரிப்பு பணிகளுக்காக இன்று (பிப்.11) பல்வேறு வழித்தடங்களுக்குச் செல்லும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவைக்கு உதவும் வகையில் புறநகர் ரயில்கள் செயல்பட்டு வருகிறது. மின்சார ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித் தடத்தில் உள்ள கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் இன்று (பிப்.11) காலை தொடங்கி மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in