'பேஸ்பால்' உத்தியைப் பாராட்டும் டிராவிட்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 'பேஸ்பால்' உத்தியைப் பாராட்டியுள்ளார் டிராவிட்.
டிராவிட்
டிராவிட்ANI

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 'பேஸ்பால்' உத்தியைப் பாராட்டியுள்ளார் டிராவிட்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்தது இந்திய அணி. இந்த டெஸ்டில் வென்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது:

“இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடுகிறார்கள். அதனை 'பேஸ்பால்' அல்லது எப்படி அழைத்தாலும் சரி, அது ஒரு பெயர் மட்டும் தான். 'பேஸ்பால்' குறித்து இங்கிலாந்து அணி மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பது தெரியவில்லை, ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

உண்மையில் இங்கிலாந்து அணியிடம் சிறந்த ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது, அனைவரும் அவர்களின் திறன்களை நன்கு வெளிப்படுத்தினர். ஒரு சில ஷாட்களை அடிக்க தனித் திறமை வேண்டும், அவ்வளவு சுலபமாக அப்படி விளையாட முடியாது. அவர்களின் ஆட்டத்தை நான் அதிகம் பார்த்திருக்கிறேன், எப்போது நிதானமாக விளையாட வேண்டும் எப்போது பந்துவீச்சாளர்களைத் தாக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் இங்கிலாந்து அணி விளையாடும் விதம் வித்தியாசமாக இருக்கிறது, அதில் சந்தேகமே இல்லை. மேலும் அவர்கள் வெற்றிகரமாக விளையாடி வருகின்றனர். நாங்களும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in