மும்பை அணிக்கு பாண்டியா கேப்டன் ஆனது ஏன்?: மார்க் பௌச்சர் விளக்கம்

மும்பை அணியின் கேப்டனாக பாண்டியா தேர்வு செய்யப்பட்டதிற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியுள்ளார்.
மார்க் பௌச்சர்
மார்க் பௌச்சர்ANI

மும்பை அணியின் கேப்டனாக பாண்டியா தேர்வு செய்யப்பட்டதிற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2024-ல் மும்பை இந்தியன்ஸ் அணியை பாண்டியா வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த முடிவால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் பலரும் தங்களின் அதிருப்தியை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் மும்பை அணிக்கு ஹார்திக் பாண்டியா கேப்டன் ஆனது குறித்து ஒரு பாட்காஸ்ட்டில் பேசினார்.

மார்க் பௌச்சர் பேசியதாவது: “பாண்டியாவை கேப்டனாகத் தேர்வு செய்தது முழுக்க முழுக்க கிரிக்கெட் தொடர்பான முடிவாகும். ரோஹித் சர்மா ஒரு சிறந்த கேப்டன், ஆனால் கடந்த இரு ஐபிஎல் போட்டிகளில் அவரது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. எனவே கேப்டன் என்ற அழுத்தம் இல்லாமல் அவர் ஒரு வீரராகக் களமிறங்க வேண்டும். எப்போதும் சிரித்த முகத்தோடு ரோஹித் சர்மாவை களத்தில் பார்க்க வேண்டும். அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். மேலும் பாண்டியா ஏற்கெனவே மும்பை அணிக்காக விளையாடியவர். அவரை மீண்டும் மும்பை அணிக்குத் தேர்வு செய்ய முடிவு செய்தோம். ஒரு கேப்டனாக அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ஒரு முறை கோப்பையை வென்றுள்ளார். மற்றொரு முறை அணியை இறுதிச்சுற்று வரை அழைத்துச் சென்றார். இதனால் அவரை கேப்டனாகத் தேர்வு செய்தோம். இந்த முடிவால் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர். உணர்ச்சிகளைத் தள்ளி வைத்தால் இது முழுக்க முழுக்க கிரிக்கெட் தொடர்பான முடிவு என்பது புரியும். எனவே ரோஹித் எந்த அழுத்தமும் இல்லாமல் ரன்களை குவிக்கட்டும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in