இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடர்: அட்டவணை அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்று 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடர்
இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடர்ANI

டி20 உலகக் கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்று 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

டி20 உலகக் கோப்பை ஜுன் 1-ல் தொடங்கி ஜுன் 29-ல் முடிவடைகிறது. கரீபியன் தீவுகளில் ஏழு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துகின்றன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்று 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இத்தொடர் ஜூலை 6 முதல் 14 வரை நடைபெறும் எனவும், அனைத்து ஆட்டங்களும் ஹராரேவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2022-ல் இந்திய அணி ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றது. டி20 ஆட்டத்தைப் பொறுத்தவரை இவ்விரு அணிகளும் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் மோதின, அந்த ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரின் அட்டவணை:

ஜுலை 6 - முதல் டி20

ஜுலை 7 - 2-வது டி20

ஜுலை 10 - 3-வது டி20

ஜுலை 13 - 4-வது டி20

ஜுலை 14 - 5-வது டி20

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in