“பேச்சு வேண்டாம், வீச்சு மட்டும்தான்”:'கோட்’ படம் குறித்து யுவன் சங்கர் ராஜா

விஜய் நடிக்கும் கோட் படம் குறித்த அப்டேட்டை சொல்ல மாட்டேன் என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா @thisisysr

விஜய் நடிக்கும் கோட் படம் குறித்த அப்டேட்டை சொல்ல மாட்டேன் என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யுவன் சங்கர் ராஜா பேசினார்.

யுவன் சங்கர் ராஜா பேசியதாவது: “இம்முறை நான் தெளிவாக உள்ளேன். இனி பேச்சு இல்லை வீச்சு தான். இப்படத்தில் பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. படத்தின் வேலைகள் நன்றாக நடைபெற்று வருகிறது” என்றார்.

மேலும் படத்தின் அப்டேட் குறித்து கேட்டதிற்குச் சிரித்துக் கொண்டே ‘சொல்ல மாட்டேன்’ என்றார். 2003-ல் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புதிய கீதை’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in