கில் அபார சதம்: வலுவான முன்னிலையில் இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் கில் தனது 3-வது சதத்தை விளாசினார்.
கில்
கில்ani

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் கில் தனது 3-வது சதத்தை விளாசினார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 253 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் பிறகு 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தொடக்கம் முதல் நிதானமாக விளையாடிய கில் சதம் அடித்தார். டெஸ்டில் அவரது 3-வது சதம் இது. இந்திய அணி 350 ரன்கள் முன்னிலைப் பெற்று விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in