விஜய் கட்சியில் இணைகிறேனா?: காயத்ரி ரகுராம் விளக்கம்

நான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகப் பணியாற்றக்கூடிய இடம் அதிமுக என விளக்கம் அளித்துள்ளார்.
காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்@AIADMKOfficial
1 min read

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைச் சமீபத்தில் தொடங்கியுள்ளார். அவருடைய அரசியல் வருகைக்கு அரசியல் தலைவர்கள் முதல் திரைத் துறையினர் வரை அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் விஜய் கட்சியில் நடிகை காயத்ரி ரகுராம் இணைவதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

தனது X தளத்தில் காயத்ரி ரகுராம் கூறியதாவது:

“நான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகப் பணியாற்றக்கூடிய இடம் அதிமுக. நிர்வாகம் தெரிந்த அதிமுக-வை மட்டுமே ஆட்சி செய்ய மக்கள் விரும்புவார்கள். தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அதிமுக மட்டுமே புரிந்து கொண்டுள்ளது. நான் எப்போதும் அதிமுக மூலம் சேவை செய்வேன் மக்களுக்காக. 6 நாட்கள் நான் குடும்பத் திருமணத்தில் பிஸியாக இருந்தேன். அதுக்காக உங்களுக்கெல்லாம் ஏன் இப்படிக் குழப்பம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in