பிப்.29-க்குப் பிறகும் பேடிஎம் சேவை வழக்கம் போல் செயல்படும்: நிறுவனர் விளக்கம்

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து பிப்.29-க்கு பின்பும் பேடிஎம் சேவை வழக்கம் போல் செயல்படும் என பேடிஎம் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
விஜய் சேகர் சர்மா
விஜய் சேகர் சர்மா@vijayshekhar

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து பிப்.29-க்கு பின்பும் பேடிஎம் சேவை வழக்கம் போல் செயல்படும் என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.

வருகிற பிப்.29-க்கு பிறகு பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை மூலம் எந்த வாடிக்கையாளரும், எந்த கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பிப்.29-க்கு பின்பும் பேடிஎம் சேவை வழக்கம் போல் செயல்படும் என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் இந்த தடை உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறியதாவது: “பிப்.29-க்குப் பிறகும் பேடிஎம் சேவை வழக்கம் போல் செயல்படும் என அனைத்து பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு கடினமான சூழலுக்கும் ஒரு தீர்வு இருக்கும். இந்தியா தொடர்ந்து நிதிச் சேவைகளில் பாராட்டுகளை பெரும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in