ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா: விடுதலை படத்திற்கு அமோக வரவேற்பு

இவ்விழாவில் இயக்குநர் வெற்றி மாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா
ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா@sooriofficial

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் நடிப்பில், கடந்த மார்ச் மாதம் வெளிவந்த படம் ‘விடுதலை’. ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இப்படத்தின் இரு பாகங்களும் ரோட்டர்டாமின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் 53-வது சர்வதேசத் திரைப்பட விழா ஜனவரி 25 முதல் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விடுதலை படத்தின் இரு பாகங்களும் திரையிடப்பட்டது. மார்ச் மாதம் வெளிவந்த விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகம் இன்னும் வெளிவரவில்லை.

அதிகாரத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடக்கூடிய மக்கள் இயக்கம் குறித்த கதை தான் விடுதலை. இந்நிலையில் ரோட்டர்டாமின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை படத்தின் இரு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் முடிந்தபின் அனைவரும் 5 நிமிடத்திற்கும் மேலாக எழுந்து நின்று பாராட்டியுள்ளனர். இது தொடர்பான காணொளியை விடுதலை படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும், இப்படத்தின் ஒரு சில காட்சிகள் திரையரங்குகளில் மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதால், இவ்விழாவில் திரையிடப்படவில்லை எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவ்விழாவில் இயக்குநர் வெற்றி மாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in