ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்ANI

இங்கிலாந்து X1 அறிவிப்பு: 2-வது டெஸ்டில் களமிறங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

20 வயதான சோயிப் பஷீர் தனது முதல் டெஸ்டில் விளையாட உள்ளார்.
Published on

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் நாளை (வெள்ளிக்கிழமை) விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்டிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் விலகினார். அவருக்கு பதில் மாற்று வீரராக 20 வயதான சோயிப் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது முதல் டெஸ்டில் விளையாட உள்ளார் சோயிப் பஷீர். மேலும் இந்த டெஸ்டில் அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சனும் களமிறங்குகிறார். இது அவரின் 184-வது டெஸ்டாகும்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

ஸாக் கிராலே, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹமது, டாம் ஹார்ட்லே, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

logo
Kizhakku News
kizhakkunews.in