பிப். 1 முதல், வாரத்துக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை: எந்த ஊரில்?

2022-ல் பெல்ஜியம் நாட்டில் இத்திட்டம் முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டது.
பிப். 1 முதல், வாரத்துக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை: எந்த ஊரில்?
ANI

ஜெர்மனியில் வாரத்தில் 4 நாள்கள் மட்டும் வேலை பார்க்கும் திட்டத்தை நாளை (பிப்.1) முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 5 நாள் வேலை, இரண்டு நாள் விடுமுறை என்ற திட்டத்தின் கீழ் பெரும்பாலான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருசில இடங்களில் வாரத்தில் 6 நாள் வேலை, ஒரு நாள் விடுமுறை. இந்நிலையில் பணியாளர்கள் உற்சாகமாக வேலை செய்யவேண்டும் என்கிற நோக்கத்தில் ஜெர்மனியில் வாரத்தில் 4 நாள்கள் மட்டும் வேலை பார்க்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாளை (பிப்.1) முதல் தொடங்கவுள்ள இத்திட்டத்தைச் சோதனை முயற்சியாக 6 மாதங்களுக்குச் செயல்படுத்தப் போவதாகவும் 45 நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளன.

இதற்கு முன்பு அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுக்கல், கனடா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்தச் சோதனை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதில் பணியாளர்கள் மிகவும் உற்சாகமாக வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது. 2022-ல் பெல்ஜியம் நாட்டில் இத்திட்டம் முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டது. ஆனால் ஊழியர்கள் 5 நாள்களில் எவ்வளவு நேரம் வேலை செய்வார்களோ அதை 4 நாள்களில் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in