அக்னி சோப்ரா
அக்னி சோப்ரா

ரஞ்சி கோப்பை: உலக சாதனை படைத்த மிசோரம் வீரர்

மிசோரம் வீரரான அக்னி சோப்ரா தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
Published on

மிசோரம் வீரரான அக்னி சோப்ரா தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

25 வயதான அக்னி சோப்ரா ரஞ்சி கோப்பையில் மிசோரம் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் வெளிவந்த “12த் ஃபெயில் (12th Fail)” படத்தை இயக்கிய விது வினோத் சோப்ராவின் மகன். அக்னி சோப்ரா இந்தாண்டு ரஞ்சி கோப்பையில், தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதுவரை 8 இன்னிங்ஸில் விளையாடிய அக்னி சோப்ரா 5 சதங்கள் விளாசியுள்ளார்.

ரஞ்சி கோப்பையில் அக்னி சோப்ராவின் ரன் விவரம்:

(166, 92, 166, 15, 114, 10, 105, 101)

இதன் மூலம் முதல்தரப் போட்டிகளில் தனது முதல் 4 ஆட்டங்களிலும் சதம் அடித்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார் அக்னி சோப்ரா.

மேலும், அக்னி சோப்ராவின் தாயான பிரபல ஊடகர் அனுபமா சோப்ராவும் தனது மகனை X தளத்தில் பாராட்டியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in