மீண்டும் பாடும் மறைந்த பாடகர்கள்: ரஹ்மானுக்குக் கிடைக்கும் பாராட்டுகளும் எதிர்ப்புகளும்

மறைந்த ஒருவரின் குரலுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது என்பது இதுவே முதல் முறையாக நிகழ்கிறது.
ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்ANI

மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் குரலைப் பயன்படுத்தியதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றோம் என ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ என்கிற பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது பாடி உள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அவர்களின் குரலைச் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தினார் ஏ.ஆர். ரஹ்மான்.

அவர்களின் குரலைப் பயன்படுத்தியதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றுத் தகுந்த ஊதியத்தையும் அனுப்பினோம் என ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார். மறைந்த ஒருவரின் குரலுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது என்பது இதுவே முதல் முறையாக நிகழ்கிறது.

இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே போல இதில் சில சிக்கல்களும் உள்ளது என ஒரு சிலர் கூறி வருகின்றனர். எனவே, இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in