கரண் ஜோஹர் படத்தில் தென்னிந்திய சூப்பர்ஸ்டார்!

ஹிந்தி திரையுலகின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் சமூக ஊடகங்களில் தனது தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் ஒரு படத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கரண் ஜோஹர்
கரண் ஜோஹர்ANI

இயக்குநர் கரண் ஜோஹர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சமூக ஊடகங்களில் தனது தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் ஒரு படத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஹிந்தி திரையுலகின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் சமூக ஊடகங்களில் தனது தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் ஒரு படத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதில் "சமீபத்தில் ‘பான் இந்தியா’ படத்தில் கலக்கிய தென்னிந்திய சூப்பர் ஸ்டார்", "பெரிய அளவில் விரும்பப்படும் நடிகை" மற்றும் "பாரம்பரிய அறிமுக நடிகர்" ஆகியோர் நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தனது அடுத்த படம் குறித்து கரண் ஜோஹர் கூறியதாவது:

“இது திரைப்பட அறிவிப்பு அல்ல. கடந்த ஒரு வருடமாக இப்படத்தில் பணியாற்றி வருகிறோம், ஆனால் இயக்குநர் எடுத்த முடிவு என்பதால் படம் குறித்த விவரங்களை மறைத்து வைத்திருந்தோம். படத்தைப் பற்றிய சில குறிப்புகளை வெளியிடுகிறோம், அதனை சரியாகக் கண்டுபிடிப்பவர்கள் படம் பார்க்க அழைக்கப்படுவார்கள்” என்றார்.

மேலும் அவர் வெளியிட்ட இப்படத்தின் குறிப்புகள்:

ஏ) சமீபத்தில் ‘பான் இந்தியா’ படத்தில் கலக்கிய தென்னிந்திய சூப்பர் ஸ்டார்

பி) பெரிய அளவில் விரும்பப்படும் உணர்ச்சிப்பூர்வமான நடிகை

சி) அயராது உழைக்கும் ஒரு பாரம்பரிய அறிமுக நடிகர்

இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டதைத் தொடர்ந்து அப்படம் சர்ஸாமீனாக இருக்கலாம் என்றும் மேலும் கரண் ஜோஹர் கொடுத்த குறிப்புகளை வைத்து ஏ) பிருத்விராஜ் சுகுமாரன், பி) கஜோல், சி) சைஃப் அலிகானின் மகன் இப்ராஹிம் அலிகான் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in