இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடை நீக்கம்: ஐசிசி

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்குத் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இலங்கை அணி மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கை கிரிக்கெட் வாரியம் @icc
1 min read

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்குத் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இலங்கை அணி மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

2023 உலகக் கோப்பையில் இலங்கை அணி 9 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து இலங்கை விளையாட்டுத்துறை, இலங்கை கிரிக்கெட் வாரியம் மொத்தமாகக் கலைக்கப்படுவதாகக் கூறியது.

இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்குத் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும், இடை நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளைக் கவனித்து வருவதாகவும், அதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே இலங்கை அணி மீதான தடை நீக்கப்பட்டதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in