இந்திய ஏ அணியில் ரிங்கு சிங்

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2-வது முதல்தர ஆட்டத்தில் இந்தியா ஏ அணியில் தேர்வாகியுள்ளார் ரிங்கு சிங்.
ரிங்கு சிங்
ரிங்கு சிங் ANI

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2-வது முதல்தர ஆட்டத்தில் இந்தியா ஏ அணியில் தேர்வாகியுள்ளார் ரிங்கு சிங்.

இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் டிரா ஆன நிலையில் 2-வது முதல்தர ஆட்டம் நாளை (ஜன. 24) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்கான இந்திய ஏ அணியில் ரிங்கு சிங் தேர்வாகியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் தெ.ஆ. ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், அத்தொடரில் விளையாடவில்லை.

கடந்த 5 மாதங்களாக டி20 போட்டிகளில் அசத்திய ரிங்கு சிங் இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடி உள்ளார். ரிங்கு சிங் இதுவரை 46 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 57.57 சராசரியில் 3109 ரன்கள் குவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in