ஐசிசி விருதுகள்: ஒரு நாள் கனவு அணியில் 6 இந்திய வீரர்கள்

2023-ம் ஆண்டிற்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. ஒருநாள் கனவு அணியில் 6 இந்திய வீரர்களும், டெஸ்ட் அணியில் இருவரும், டி20 அணியில் 4 இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி விருதுகள்
ஐசிசி விருதுகள்ANI

2023-ம் ஆண்டிற்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. ஒருநாள் கனவு அணியில் 6 இந்திய வீரர்களும், டெஸ்ட் அணியில் இருவரும், டி20 அணியில் 4 இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023-ன் சிறந்த ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. ஆண்கள் அணி, மகளிர் அணி என மூன்று வடிவங்களையும் சேர்த்து 5 சிறந்த அணிகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் கனவு அணியில் 6 இந்திய வீரர்களும், டெஸ்ட் அணியில் இருவரும், டி20 அணியில் 4 இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி-யின் கனவு அணி விவரங்களைக் கீழே காணலாம்.

ஐசிசி-யின் சிறந்த ஒரு நாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ஆடம் சாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி.

ஐசிசி-யின் சிறந்த டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரண், மார்க் சேப்மேன், சிக்கந்தர் ராசா, அல்பெஸ் ரம்ஜானி, மார்க் அடைர், ரவி பிஷ்னாய், ரிச்சர்ட் நிங்கரவா, அர்ஷ்தீப் சிங்.

ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, திமுத் கருணரத்னே, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், மிட்செல் ஸ்டார்க், ஸ்டூவர்ட் பிராட்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in