நேதாஜி இல்லையென்றால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்காது: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

1942-க்குப் பிறகு காந்தியின் சுதந்திரப் போராட்டம் பலனளிக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்காது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிANI

1942-க்குப் பிறகு காந்தியின் சுதந்திரப் போராட்டம் பலனளிக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்காது என அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:

“1942-க்குப் பிறகு காந்தியின் சுதந்திரப் போராட்டம் பலனளிக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்காது. சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் மறந்து குழப்பத்திற்கு ஆளானோம். இந்திய ராணுவத்தினரின் புரட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தது. 1942-க்குப் பிறகு இந்தியாவிற்குள்ளேயே மக்கள் மோதிக் கொண்டனர்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in