சர்ச்சையில் சிக்கிய ஆஸி. வீரர் மேக்ஸ்வெல்!

பிப்.1 அன்று தொடங்கவுள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்ANI

அடிலெய்டில் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேக்ஸ்வெல், மது குடித்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேக்ஸ்வெல்லிடம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல் சில நாள்களுக்கு முன்பு ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், அதில் கலந்துகொண்ட மேக்ஸ்வெல், மது குடித்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேக்ஸ்வெல்லிடம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பிப்.1 அன்று தொடங்கவுள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in