தயாராகும் ‘அயலான் - 2’: உறுதிசெய்த படக்குழுவினர்

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
அயலான் - 2
அயலான் - 2@Siva_Kartikeyan

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

கடந்த ஜன.12 அன்று வெளியான ‘அயலான்’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. சில நாள்களுக்கு முன்பு இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அயலான் - 2 கண்டிப்பாக வெளியாகும் என சிவகார்த்திகேயனும் கூறினார்.

சமீபத்தில் அயலான் படம் உருவான விதத்தின் காணொளி ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் சிவகார்த்திகேயன் பேசியாதாவது:

“அயலான் - 2 கண்டிப்பாக நடக்கும். இதை நாங்கள் கடமைக்காக சொல்லவில்லை. படம் குறித்த சிந்தனை ஒன்று இருக்கிறது. இது குறித்து ஆராய்வோம். அயலான் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அதிலிருந்த சிறு தவறுகளைத் திருத்திக்கொண்டு, அதனை இரண்டாம் பாகத்தில் சரிசெய்வோம்” என்றார்.

இந்நிலையில் ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in