இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதல் இரு டெஸ்டுகளிலிருந்து கோலி விலகல்

தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளிலிருந்து விலகினார் கோலி.
கோலி
கோலிANI

தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளிலிருந்து விலகினார் கோலி.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஜன. 25 அன்று ஹைதராபாதில் நடைபெறுகிறது.

இந்நிலையில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரு டெஸ்டுகளிலிருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகக் கோலி விலகியுள்ளார். எனவே ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அவரின் விருப்பத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று இதுகுறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஞாயிறன்று டெஸ்டுக்கு முந்தைய பயிற்சிக்காக ஹைதராபாத்துக்கு வந்தார் கோலி. ஆனால் இன்று அவர் பயிற்சி மேற்கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்ற கோலி, இந்தியாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20-யில் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை. கடைசி இரு டி20 ஆட்டங்களில் அவர் விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலிக்குப் பதிலாக புஜாரா, ரஜத் படிதார், அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான் ஆகிய நால்வரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in