சிவகார்த்திகேயன் 21: ஜன. 26 அன்று வெளியாகும் முதல் பார்வை டீசர்

இப்படம் ராணுவ வீரர் பற்றிய கதை அம்சம் கொண்டது என்றும், படத்தின் தலைப்பு ‘ராணுவன்’ என்றும் செய்திகள் பரவி வருகிறது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்@Rajkumar_KP
1 min read

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் முதல் பார்வை டீசர் ஜன. 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-ல் வெளியான ‘ரங்கூன்’ படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் தனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றி வருகிறார். இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இசை - ஜி.வி பிரகாஷ். இப்படம் குறித்து இயக்குநர் நெல்சன் தனது X தளத்தில், “எஸ்கே21 படத்தின் முதல் பார்வை டீசரை பார்த்தேன். இந்த உணர்ச்சிகரமான பயணத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை இந்த உலகம் பார்க்கும் வரை காத்திருக்க முடியவில்லை. ஒட்டுமொத்த படக்குழுவினர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை டீசர் ஜன. 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ராணுவ வீரர் பற்றிய கதை அம்சம் கொண்டது என்றும், படத்தின் தலைப்பு ‘ராணுவன்’ என்றும் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இந்த காரணத்தால் தான் குடியரசு தினம் அன்று படத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகிறது எனவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

logo
Kizhakku News
kizhakkunews.in