சிவகார்த்திகேயன் 21: நெல்சன் கொடுத்த புதிய அப்டேட்!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார் இயக்குநர் நெல்சன்.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்@Nelsondilpkumar

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார் இயக்குநர் நெல்சன்.

2017-ல் வெளியான ‘ரங்கூன்’ படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் இயக்குநர் நெல்சன்.

‘எஸ்கே21’ குறித்து இயக்குநர் நெல்சன் தனது X தளத்தில் கூறியதாவது: “எஸ்கே21 படத்தின் முதல் பார்வை டீசரை பார்த்தேன். இந்த உணர்ச்சிகரமான பயணத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை இந்த உலகம் பார்க்கும் வரை காத்திருக்க முடியவில்லை. ஒட்டுமொத்த படக்குழுவினர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in