ஐபிஎல்: விளம்பரதாரர் உரிமையைப் பெற்ற டாடா குழுமம்

ஐபிஎல் போட்டியின் பெயருக்கான விளம்பரதாரர் உரிமையை டாடா குழுமம் 2028 வரை கைப்பற்றியுள்ளது.
ஐபிஎல்
ஐபிஎல்ANI

2028 வரையிலான ஐபிஎல் போட்டியின் பெயருக்கான விளம்பரதாரர் உரிமையை டாடா குழுமம் கைப்பற்றியுள்ளது.

இதன் மதிப்பு ரூ. 2,500 கோடி. ஐபிஎல் வரலாற்றில் அதிகத் தொகைக்கு முடிக்கப்பட்ட ஒப்பந்தம் இதுதான் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

2022, 2023 ஆண்டுகளுக்கான ஐபிஎல் பெயருக்கான விளம்பரதாரர் உரிமை டாடா குழுமத்திடம் இருந்தது. மேலும் டபிள்யூபிஎல்லின் விளம்பரதாரராக டாடா உள்ளது.

2018 முதல் 2022 வரையிலான விளம்பரதாரர் உரிமையை விவோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இதன் மதிப்பு ரூ. 2,199 கோடி. 2020-ல் இதன் உரிமையை ட்ரீம் 11 பெற்றது. 2021 ஐபிஎல் விளம்பரதாரர் உரிமை மீண்டும் விவோ-க்குத் திரும்பியது.

2022-ல் விவோவிடமிருந்து அந்த உரிமையைப் பெற்றது டாடா குழுமம். கடந்த இரண்டு ஆண்டுகளாக டாடா குழுமம் ஐபிஎல்லின் விளம்பரதாரராக உள்ளது.

2018-22 ஐபிஎல் போட்டிகளுக்கு விவோ செலுத்தியதை விட 13.7% அதிகமாக டாடா குழுமம் செலுத்தியுள்ளது.

2024 ஐபிஎல் போட்டி மார்ச் 22-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in