பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனையைத் திருமணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்...
திருமணக் கோலத்தில் சோயிப் மாலிக்
திருமணக் கோலத்தில் சோயிப் மாலிக்@realshoaibmalik
1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், தற்போது பாகிஸ்தான் நடிகை சனாவைத் திருமணம் செய்துள்ளதாக அறிவித்து புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் கடந்த 2010-ல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சமீப நாட்களாக சானியா மிர்சாவும், சோயிப் மாலிக்கும் பிரியப்போவதாகச் சில தகவல்கள் வெளியாயின. இதைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது தான். இதில் உங்களுக்கு எது கடினமானது என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள்” எனப் பதிவிட்டார். இதன் பிறகு சோயிப் மாலிக்கை சானியா பிரிய உள்ளாரா என்ற பெரிய கேள்வி எழுந்தது.

இந்நிலையில் சோயிப் மாலிக், தற்போது பாகிஸ்தான் நடிகை சனாவைத் திருமணம் செய்துள்ளார். மேலும் தனது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in