கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும்

கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்ANI

கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைச் சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பேருந்து நிலையத்துக்குக் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் காரணமாகப் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. 2,310 பேருந்துகள் வரை இயக்கப்படுவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு சிலர் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுவதில் சிரமப்பட்டதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியதாவது:

“கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும். 1000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்த இடமில்லை. ஜிஎஸ்டி சாலையைக் கடந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் ” என்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in