சிம்புவுடன் மீண்டும் இணைவேன்: ஐசரி கணேஷ் கொடுத்த புதிய அப்டேட்!

சிம்புவுடனான அடுத்த படம் சரியான நேரத்தில் நடைபெறும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.
சிம்பு
சிம்புANI

சிம்புவுடனான அடுத்த படம் சரியான நேரத்தில் நடைபெறும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2022 செப்டம்பர் மாதம் வெளிவந்த படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு- 2 படம் நடைபெறும் என்று படகுழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவிடம் மற்றொரு படத்தில் நடிக்க ரூ.1 கோடி முன்பணமாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சில காரணத்தால் அந்த படம் தொடங்கவில்லை.

இதைத் தொடர்ந்து வாங்கிய முன்பணத்தைத் திருப்பித் தருமாறு சிம்புவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பிறகு ஐசரி கணேஷ்- சிம்பு இடையே கருத்து வேறுபாடு நடந்ததாக சில தகவல்கள் வெளியானது. இது குறித்து ஐசரி கணேஷ் பேசியதாவது, “எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சிம்பு அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். சிம்புவுடனான அடுத்த படம் சரியான நேரத்தில் நடைபெறும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in