அயோத்தி கோயில் கருவறைக்குள் ராமர் சிலை!

200 கிலோ எடையிலான ராமர் சிலை, கிரேன் மூலமாகக் கோயில் கருவறையில் வைக்கப்பட்டது.
அயோத்தி கோயில்
அயோத்தி கோயில்ANI

ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக ராமர் சிலை கோயில் கருவறையில் அமர்த்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22 அன்று நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனவரி 22 அன்று ராமர் கோயிலுக்கு தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 200 கிலோ எடையிலான ராமர் சிலை, கிரேன் மூலமாகக் கோயில் கருவறையில் வைக்கப்பட்டது. அச்சமயத்தில் வேதங்கள் ஒலிக்கப்பட்டதாகவும், மேலும் சிலைக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருவறைக்கு வெளியே வாஸ்து பூஜை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை நடத்த பல்வேறு ஏற்பாடுகளை உத்திர பிரதேச அரசு செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in