டி20 தொடர்: 4-வது ஆட்டத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து அணி

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.
மிட்செல்
மிட்செல்@icc

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 4-வது டி20 ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்காக ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார் ரிஸ்வான். அவருடன் தொடக்கத்தில் பாபர் அஸாமும், முடிவில் மொஹம்மது நவாஸும் நல்ல கூட்டணியை அமைத்துத் தந்தனர். நடுவரிசை பேட்டர்கள் யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. பாபர் அஸாம் 19 ரன்களில் வெளியேரினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரிஸ்வான் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அசத்தினார். மொஹம்மது நவாஸ் 3 சிக்ஸர்களுடன், 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

இதன் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், வில் யங் ஆகியோர் முறையே 8, 0, 4 ரன்களில் வெளியேறினர். இம்மூன்று விக்கெட்டுகளையும் ஷாஹின் அஃப்ரிடி வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து மிட்செல் மற்றும் பிளிப்ஸ் அருமையான கூட்டணியை அமைத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் கடைசி வரை இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்த இலக்கை எட்டியது நியூசிலாந்து அணி.

மிட்செல் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 44 பந்துகளில் 72 ரன்களுடனும், பிளிப்ஸ் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் 70 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஏற்கெனவே மூன்று டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 4-வது ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் ஜனவரி 21-ல் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in