முதல் டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மே.இ. தீவுகளை வென்ற ஆஸி அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி@icc

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முறையே 188 மற்றும் 283 ரன்களை எடுத்தன.

இதன் பிறகு 2-வது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 120 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் எதிர்பாராத வகையில் கவாஜா காயத்தால் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து மார்னஸ் லபுஷேன் மற்றும் சிமித் உதவியால் விக்கெட் இழப்பின்றி இந்த இலக்கை எட்டியது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலிய அணி. 119 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் ஜன. 25 அன்று தொடங்குகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in