அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகள் எடுத்த ஷமார் ஜோசப்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் ஷமார் ஜோசப்.
ஷமார் ஜோசப்
ஷமார் ஜோசப்@icc

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் ஷமார் ஜோசப்.

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 188 ரன்களுக்குச் சுருண்டது. இதன் பிறகு முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 283 ரன்கள் எடுத்தது.

தனது அறிமுக டெஸ்டில் விளையாடிய ஷமார் ஜோசப் தான் வீசிய முதல் பந்திலேயே ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், இந்த இன்னிங்ஸில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்தார். அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான முறையில் தனது கிரிக்கெட் வாழ்கையைத் தொடங்கியுள்ளார் ஷமார் ஜோசப்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in