ஜன.22: மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை

ஜன.22-ல் மத்திய அரசு அலுவலகங்கள் மதியம் 2.30 மணி வரை செயல்படும்
ராமர் கோயில்
ராமர் கோயில்ANI
1 min read

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22 அன்று நடைபெறவுள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இதை முன்னிட்டு ஜன.22 அன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையை அறிவித்தது மத்திய அரசு. ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.22-ல் மத்திய அரசு அலுவலகங்கள் மதியம் 2.30 மணி வரை செயல்படும். ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்த அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in