டி20 ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள்: உலக சாதனையை சமன் செய்த ஃபின் ஆலன்

ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் எனும் சாதனையைப் படைத்தார் ஃபின் ஆலன்
ஃபின் ஆலன்
ஃபின் ஆலன்ANI

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வீரரான ஃபின் ஆலன் ஒரு இன்னிங்ஸில் 16 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. முதலில் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஃபின் ஆலன் 62 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் அடித்து வெளியேறினார். இதன் மூலம் டி20-ல் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் எனும் சாதனையைப் படைத்தார் ஃபின் ஆலன். இதற்கு முன்பு பிரெண்டன் மெக்கல்லம் 123 ரன்கள் அடித்து இப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இப்போது அவரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார் ஃபின் ஆலன்.

இச்சாதனையுடன் சேர்த்து மேலும் டி20-ல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஹஸ்ரத்துல்லா ஜஸாயின் (16 சிக்சர்கள்) சாதனையை சமன் செய்தார் ஃபின் ஆலன். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில், முதல் மூன்று ஆட்டங்களையும் வென்றுள்ளது நியூசிலாந்து அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in