விக்ரமின் முதல் பான் இந்தியப் படம் ‘தங்கலான்’

விக்ரமின் முதல் பான் இந்தியப் படம் ‘தங்கலான்’
தங்கலான்
தங்கலான்@beemji

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘தங்கலான்’. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல வெற்றிப் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது விக்ரம், பசுபதி போன்ற பலர் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இப்படம் ஜன.26 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் வேலைகள் முழுமையடையாதக் காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பா.ரஞ்சித் தன்னுடைய X தளத்தில் வெளியிட்டுள்ளார். இது விக்ரம் நடிப்பில் வெளிவரும் முதல் பான் இந்தியப் படமாகும். இப்படத்தின் இசை - ஜி.வி பிராகாஷ் குமார். 3 ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் ‘தங்கலான்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in