ஒரு வார்த்தையில் உடைந்த சஸ்பென்ஸ்: மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்புக்கு வழக்கம் போல் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மெரி கிறிஸ்துமஸ்
மெரி கிறிஸ்துமஸ்@VijaySethuOffl

2018-ல் ‘அந்தாதூன்’ எனும் வெற்றிப் படத்தை இயக்கியவர் ஸ்ரீ ராம் ராகவன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’.

7 வருடங்களாக துபாயிலிருந்து விட்டு மும்பை வருகிறார் விஜய் சேதுபதி. கிறிஸ்துமஸ் தினத்தின் முந்தைய நாள் இரவு ஊரைச் சுற்றிப்பார்க்க செல்லும் ஆல்பர்ட் (விஜய் சேதுபதி), ஒரு ஹோட்டலில் கத்ரீனா கைஃப்பை சந்திக்கிறார். கத்ரீனாவுடன் தனது வாய் பேச முடியாத குழந்தையும் உள்ளார். கத்ரீனாவுடன் பேச தொடங்கும் விஜய் சேதுபதி அவர் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் நன்றாக பேசி தங்களின் நட்பை வளர்க்கின்றனர். கத்ரீனா கிறிஸ்துமஸை தங்கள் வீட்டில் கொண்டாடலாம் என விஜய் சேதுபதியை அழைக்க அவரும் செல்கிறார். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு நடனம் ஆடுகிறார்கள். தான் வாங்கிய கிஃப்ட்டை கத்ரீனா வீட்டில் வைக்கிறார் ஆல்பர்ட். இதைத் தொடர்ந்து இருவரும் தங்களின் காதல், திருமணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் பிறகு விஜய் சேதுபதி, கத்ரீனாவை அழைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்க்குச் செல்கிறார். அங்கிருந்து மீண்டும் கத்ரீனாவின் வீட்டிற்க்குத் திரும்பும் போது தான் கதைத் தொடங்குகிறது.

கத்ரீனாவின் கணவன் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தத்துடன் அறையில் காணப்படுகிறார். அதை பார்த்தவுடன் இருவரும் அதிர்ச்சி அடைந்து காவல் துறையினரை அழைக்கலாம் என்ற முடிவை எடுக்கிறார்கள். இங்கு தான் ரசிகர்களுக்கு முதல் சஸ்பென்ஸ். தான் 7 வருடம் சிறையில் இருந்துவிட்டு வந்ததாக விஜய் சேதுபதி கூறுகிறார். இதனால் அங்கிருந்தால் தன் மேல் சந்தேகம் வரும் என்ற பயத்தில் அங்கிருந்து போவதாக சொல்கிறார் விஜய் சேதுபதி. தான் வெளியே செல்வதற்குள் போலிஸார் அங்கு வந்துவிட, கத்ரீனாவின் வீட்டிற்குள்ளே ஒளிந்து விடுகிறார் விஜய் சேதுபதி. இதன் பிறகு மீண்டும் ஒரு நபரிடம் கிறிஸ்துமஸை தங்கள் வீட்டில் கொண்டாடலாம் என அழைத்துச் வருகிறார் கத்ரீனா.

அந்த மரணம் எப்படி நடந்தது? யார் அதைச் செய்தது? என்பது தான் கதை. படம் சற்று மெதுவாக சென்றாலும் கடைசியில் நடக்கும் ட்விஸ்ட் அனைவரும் பாரட்டும் வகையில் உள்ளது. படத்துக்கு கூடுதல் பலமாக இசை அமைந்துள்ளது. விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்புக்கு வழக்கம் போல் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது ஹிந்திப் படமா? அல்லது தமிழ் படமா? என்கிற குழப்பத்தில் சென்ற ரசிகர்களுக்கு படம் முடிந்த விதத்திலும் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in