பிரபாஸ், கமல் நடித்த கல்கி: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
கல்கி 2898 ஏடி
கல்கி 2898 ஏடி@VyjayanthiFilms

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் எனப் பல பிரபலங்கள் நடித்து வரும் ‘கல்கி 2898 ஏடி’ படம் மே 9 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘மகாநதி’ படத்தை இயக்கியவர் நாக் அஷ்வின். இந்நிலையில் தனது 4-வது படத்தை கமல், அமிதாப் பச்சன் போன்ற ஜாம்பவான்களை கொண்டு இயக்கி வருகிறார். பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கெனவே இப்படம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு சில காரணங்களால் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது. இதைத் தொடர்ந்து ‘கல்கி 2898 ஏடி’ படம் மே 9 அன்று வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அமிதாப் பச்சன் தன்னுடைய x தளத்தில் வெளியிட்டார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in