பிரபல பாலிவுட் தயாரிப்பாளருடன் இணையும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.
பாலிவுட் தயாரிப்பாளருடன் கைகோர்கும் ரஜினி
பாலிவுட் தயாரிப்பாளருடன் கைகோர்கும் ரஜினி@NGEMovies

நடிகர் ரஜினிகாந்த் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சாஜித் நாடியாட்வாலா ஹிந்தியில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இவர் அடுத்ததாக ரஜினியுடன் இணைவதாக தன்னுடைய X தளத்தில் பதிவிட்டு, “ரஜினி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக உள்ளது. இந்த மறக்க முடியாத பயணத்தை தொடங்க நாங்கள் தயாராகி வருகிறோம்” என்றார். இப்படத்தின் இயக்குநர், நடிகர்கள், இசையமைப்பாளர் குறித்த அனைத்து விவரங்களும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினி தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஞானவேல் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்நிலையில் ரஜினியின் புதிய படம் குறித்த அப்டேட் வெளியானது. இது அவரின் 172-வது படமாக இருக்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in