கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்: டீசர் வெளியீடு!

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்: டீசர் வெளியீடு!
1 min read

கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கிறார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ். அமரன் என்கிற இப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் டீசரும் வெளியாகியுள்ளது.

அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதால் அவருக்கு இது முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கப் போகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in