கங்குவாவில் பாபி தியோல்: புதிய போஸ்டர் வெளியீடு
படம்: https://twitter.com/Suriya_offl

கங்குவாவில் பாபி தியோல்: புதிய போஸ்டர் வெளியீடு

பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Published on

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் கங்குவா. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா படானி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

படம் தொடர்பாக அவ்வப்போது விடியோ, போஸ்டர்களை வெளியிட்டு படத் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களை எதிர்பார்ப்பிலேயே வைத்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி காலை 11 மணியளவில் படத்தினுடைய இரண்டாவது பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கங்குவா படத்தில் உள்ள உதிரன் கதாபாத்திரம் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி உதிரன் கதாபாத்திரம் இடம்பெற்ற போஸ்டர் இன்று வெளியானது. பாலிவுட் நடிகர் பாபி தியோல் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். அனிமல் திரைப்படம் மூலம் பெரிய கவனம் ஈர்த்துள்ள பாபி தியோல் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நடிகர் சூர்யா, பாபி தியோலுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in