இவர் என் ஜோடி: சாய் பல்லவி தங்கை

பூஜா கண்ணன்
பூஜா கண்ணன்@poojakannan_97
1 min read

சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார் பூஜா கண்ணன்.

பிரேமம் படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி. இவரது தங்கையான பூஜா கண்ணன் தமிழில் சித்திரை செவ்வானம் எனும் படத்தில் நடித்திருந்தார். பூஜா தனது திருமணம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் காணொளியை பதிவிட்டு, “இதுவரை என்னுடைய கிரைம் பார்ட்னராக இருந்த வினீத், என் வாழ்கைத் துணையாகப் போகிறார். சுயநலமின்றி காதலிப்பது, காதலில் பொறுமையாகவும் நிலையாகவும் இருப்பது போன்ற பலவற்றையும் இவர் தான் எனக்கு கற்றுக்கொடுத்தார்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in