அயலான்
அயலான்@kjr_studios

அயலான் படம் 4 நாள் வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

‘அயலான்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது.
Published on

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படம் வெளிவந்த 4 நாள்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு ‘அயலான்’, ‘கேப்டன் மில்லர்’, ‘மிஷன் -1’, ‘மெரி கிறிஸ்துமஸ்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது.

இப்படம் உலகளவில் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுவாக சிவகார்த்திகேயனின் படங்களைக் குடும்பத்துடன் திரையரங்குகளில் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நீண்ட காத்திருப்புக்குப் பின் வந்த ‘அயலான்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in