பிக் பாஸ் பட்டம் வென்றார் அர்ச்சனா!

பிக் பாஸ் பட்டம் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.
பிக் பாஸ் கோப்பையுடன் அர்ச்சனா
பிக் பாஸ் கோப்பையுடன் அர்ச்சனாபடம் - twitter.com/vijaytelevision

7-வது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா பட்டம் வென்றார்.

23 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா, மணி சந்திரா, மாயா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றார்கள். விஷ்ணு, தினேஷ் அதற்கு அடுத்த இடங்களைப் பிடித்தார்கள்.

பிக் பாஸ் பட்டம் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.

2 வாரங்களுக்குத் திட்டமிட்டு தான் நான் உள்ளே வந்தேன். பிறகு வெளியேறிவிடுவேன் என நினைத்தேன். அதன்பிறகு நான் இருந்தது எல்லாம் போனஸ். பள்ளி, கல்லூரியில் எனக்காக யாரும் இல்லை. ஆனால் இப்போது எனக்காக இவ்வளவு பேர் இருப்பார்கள் என நான் நினைத்தே பார்க்கவில்லை. என் கனவு நனவானது. கமல் சார் சொன்ன வார்த்தைகளை நான் தீவிரமாக எடுத்துக்கொண்டு என்னை மாற்றிக்கொண்டதால் பட்டம் வென்றேன் என்று கோப்பையை வென்ற அர்ச்சனா, நிகழ்ச்சியின் இறுதியில் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in