முதல்வர் படைப்பகம் என்றால் என்ன?: முழுக் கட்டண விவரத்துடன்..

ஒரே இடத்தில் பணியிட மையம், கலந்தாய்வுக் கூடம், படிப்பகம்..
முதல்வர் படைப்பகம் என்றால் என்ன?: முழுக் கட்டண விவரத்துடன்..
1 min read

சென்னை கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 2.85 கோடி செலவில் "கோ-ஒர்கிங் ஸ்பேஸ்" மற்றும் மாணவர்களுக்கான "படிப்பகம்" என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

முதல்வர் படைப்பகத்தில் உள்ள அம்சங்கள் என்ன?

  • முதல்வர் படைப்பகத்தில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள், இங்கு வந்து படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்துப் போட்டித் தேர்வுக்கானப் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

  • மாணவர்கள் எந்த இடையூறுமின்றி படிக்கும் வகையில் அமைதியான சூழலும் நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகள், கணினி மற்றும் இணையதள வசதியும் செய்து தரப்பட்டுள்ளன.

  • இங்கு ஒரே நேரத்தில் 51 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் இவ்விடம் அமையப் பெற்றுள்ளது.

  • போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தொழில் தொடங்கிட இயலாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணி செய்வதற்காக ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

  • இந்தத் தளத்தில் 38 நபர்கள் முறையாக அமர்ந்து பணி செய்வதற்கான நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • அதுமட்டுமின்றி 3 கலந்தாய்வு கூடங்களும் அதில் இரண்டு கூடத்தில் தலா 4 நபர்களும் ஒரு கூடத்தில் 6 நபர்களும் அமர்ந்து கலந்தாலோசனை மேற்கொள்ளும் வகையிலும் உணவு அருந்தி இளைப்பாறுவதற்காக ஒரு தளமும் என மொத்தம் மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டண விவரம்:

கோ-ஒர்கிங் ஸ்பேஸ்:

நேரம்:

  • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

  • பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை

  • அரை நாள் கட்டணம்: ரூ. 50

  • முழு நாள் கட்டணம்: ரூ. 100

  • மாதக் கட்டணம்: ரூ. 2,500

கலந்தாய்வுக் கூடம் 1:

நேரம்:

  • காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

  • ஒரு மணி நேரக் கட்டணம்: ரூ. 150

கலந்தாய்வுக் கூடம் 2:

நேரம்:

  • காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

  • ஒரு மணி நேரக் கட்டணம்: ரூ. 150

கலந்தாய்வுக் கூடம் 3:

நேரம்:

  • காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

  • ஒரு மணி நேரக் கட்டணம்: ரூ. 250

படிப்பகம்:

நேரம்:

  • காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை

  • ஒரு நபருக்கு: ரூ. 5

முதல் பிரிவு: காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரை

இரண்டாவது பிரிவு: காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

மூன்றாவது பிரிவு: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை

நான்காவது பிரிவு: மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை

ஐந்தாவது பிரிவு: இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in