தில்லிக்கு காவடி எடுத்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த விழாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த விழா குறித்து விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக விமர்சித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று காலை பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "இங்கே தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் நேற்று பேட்டியளித்தார். நாணயம் ஹிந்தியில் இருக்கிறது, தமிழில் இல்லை என்று கூறினார். ஒன்று அவருக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் அல்லது நாட்டு நடப்பு புரிந்திருக்கவேண்டும், இல்லையென்றால் தலையில் மூளையாவது இருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆருக்கும், அண்ணாவுக்கும் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த நாணயத்தையெல்லாம் அவர் பார்த்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை என்று அவர் கேட்கிறார். நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றிய அரசின் நிகழ்ச்சியாக நடந்தது. கலைஞரின் நாணயத்தை வெளியிட்டது ஒன்றிய அரசு, எனவே ஒன்றிய அமைச்சர் அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர் நாணய வெளியீட்டு விழாவை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். ஒன்றிய அமைச்சர்கள் வர மறுத்துவிட்ட காரணத்தால்தான் அவரே நாணயத்தை வெளியிட்டார். ஒன்றிய அரசு அவரை ஒரு முதல்வராக மதிக்கவில்லை. முதல்வராக அல்ல, ஒரு மனிதனாகக் கூட நினைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்த முடியாதவர்கள் கலைஞரின் விழா பற்றி பேச அருகதை இல்லை" என்று விமர்சித்திருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எச்சரிப்பதாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினுக்குப் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை: