.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வப் பாடலை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று அறிமுகம் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜய்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு களமிறங்கிய விஜய் நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்தார்.
இவற்றைத் தொடர்ந்து தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அவர், கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சென்னை பனையூரிலுள்ள தலைமை நிலையச் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.
இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வப் பாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது” போன்ற வரிகளுடன் இப்பாடல் வெளியானது.
இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியதாகவும் தமன் இசையமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.