திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு சாமி தரிசனம் செய்பவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தவிர்க்கும் விதமாக இனி ஆதார் அட்டையை காண்பிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே லட்டு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், கூடுதல் லட்டை 50 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.