பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 25-வது பதக்கம்!

பாராலிம்பிக்ஸ் ஜூடோ போட்டியில் இந்திய வீரர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை
பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 25-வது பதக்கம்!
ANI
1 min read

பாராலிம்பிக்ஸ் ஆடவர் ஜூடோ போட்டியில் இந்தியாவின் கபில் பார்மர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஜூடோ காலிறுதிப் போட்டியில் கபில் பார்மர் 10-0 என்ற கணக்கில் வெனிசுலாவைச் சேர்ந்த மார்கோ பிளாங்கோவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். அதன்பிறகு அரையிறுதிப் போட்டியில் 10-0 என்ற கணக்கில் ஈரானின் பனிடாபா கொர்ரம் அபாதியால் தோற்கடிக்கப்பட்டார் கபில் பார்மர்.

இதனைத் தொடர்ந்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கபில் பார்மர் 10-0 என்ற கணக்கில் பிரேசிலைச் சேர்ந்த டி. ஒலிவெய்ராவைத் தோற்கடித்தார்.

பாராலிம்பிக்ஸ் ஜூடோ போட்டியில் இந்திய வீரர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 11-வது வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in