கென்யா அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் டொட்டா கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக 4 டெஸ்டுகளில் விளையாடி 5 விக்கெட்டுகளையும் 1 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் கணேஷ்.
104 முதல்தர ஆட்டத்தில் விளையாடிய இவர் 365 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் கென்யா அணியின் தலைமைப் பயிற்சியாளராக கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைப் பயிற்சியாளராக கணேஷ் ஒரு வருடம் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யா அணியை உலக கோப்பை தகுதிச் சுற்றில் வெற்றி பெறச் செய்வதே தனது நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2003 ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்ற கென்யா அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் செயல்பட்டார்.